இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி

Author: kavin kumar
12 October 2021, 5:27 pm
Quick Share

திருச்சி: துறையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெற்றார்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி .ஒன்றியத்திற்கு உட்பட்ட 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் காலியிடத்திற்கான இடைத்தேர்தல் அக்டோபர் 9ஆம் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் 4 ,867 பேர், வாக்கு செலுத்தியவர்கள் 3,898 பேர் இன்று வாக்கு எண்ணிக்கையில் திமுக முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் முடிவில்அதிமுக வேட்பாளர் அமிராமி சேகரை விட 1,414வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் விபரம் பின்வருமாறு;-
முருகேசன் திமுக 2,570
அபிராமிஅதிமுக 1,156
மனோகரன் தேமுதிக 72
லலிதா மக்கள் நீதி மையம் 6
கலைச்செல்வன் அமமுக 18
மகேஸ்வரன் சுயேட்சை 21
செல்லாதவை 55

மொத்தம் 3,898

வாக்கு எண்ணிக்கை முடிவில் முருகேசன் திமுக 2,570வாக்குகள் பெற்றுள்ளார்.1,414வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வார்டை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Views: - 205

0

0