மருத்துவர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள்

Author: Udhayakumar Raman
1 July 2021, 3:58 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அரசு மருத்துவமனையில் உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .ரகுராமன் தலைமையில் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜீலை – 1ம் தேதி உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்கள் அர்பணிப்பு உடன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதிய அரசு மருத்துவமனையில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் டாக்டருமான ரகுராமன் தலைமையில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பாக்டர் .ரகுராமன் மற்றும் சாத்தூர் மருத்துவமனை தலைமை மருத்துவர் கேசவன் இணைந்து கேக் வெட்டினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்குகளை ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொரோனா கால கட்டத்தில் உயிர்களை பாதுகாக்கும் மற்றொரு கடவுளாக விளங்கும் மருத்துவர்கள் போற்றும் விதமாக இன்று மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மருத்துவர் தினம் கொண்டாடிய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 129

0

0