காதல் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம்
Author: kavin kumar26 August 2021, 2:54 pm
மதுரை: மாற்று சமூகம் என்பதால் மருத்துவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த திவ்யாமோனிஷா என்ற மருத்துவரும் திருச்சியை சேர்ந்த லெனின் என்ற மருத்துவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த நிலையில் இருவரும் நேற்று கோவிலில் காதல் திருமணம் செய்துள்ளனர்.இந்நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என கூறி காதல் திருமணத்திற்கு பெண் மருத்துவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் காதல் திருமணம் முடித்த மருத்துவர்கள் இருவரும் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தனர்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு உள்ளதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.இதனையடுத்து புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
0
0