மிலாடி நபியை முன்னிட்டு ஒரு லட்சம் புரோட்டா தானமாக மக்களுக்கு வழங்கல்

Author: Udhayakumar Raman
16 October 2021, 3:28 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மிலாடி நபியை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள மிகவும் பழமை வாய்த்த சங்கல் தோப்பு தர்காவில் ஒரு லட்சம் புரோட்டா தானமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைத்துள்ள சுமார் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த சங்கல் தோப்பு தர்கா உள்ளது.இந்த தர்காவில் ஆண்டுத் தோறும் மிலாடி நமியை முன்னிட்டு அன்னத்தானம் வழங்குவது உண்டு, இந்த அன்னதானத்தை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி, ஆந்திர, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது உண்டு,இதேபோல இந்த ஆண்டும் சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபி விழாவினை முன்னிட்டு தர்காவில் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது, இந்த மிலாடி நபி விழாவினைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி பழையப்பேட்டைப் பகுதியை சேர்ந்த பாபு என்ற கஃரலிஷ என்பவர் கடந்த 30 ஆண்டுகளைக மிலாடி நபியை யொட்டி தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு புரோட்டா தானமாக வழங்கி வருகிறார். கடந்த ஆண்டைப் போலவும் இந்த ஆண்டும் ஒன்றை டன் மைதா மாவு மூலம் சுமார் ஒரு லட்சம் ரொட்டி தயாரித்து தர்காவுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு துவாவும் நடத்தப்பட்டது.

பின்னர் தர்காவுக்கு வந்த ஒவ்வெரு பக்தர்களுக்கும் தலா 5 ரொட்டி விதம் சுமார் ஒரு லட்சம் ரொட்டிகளை மஸ்தானியம்மா வழங்கி துவக்கி வைத்தார். ஒருநாள் முழுவதும் நடைப்பெற்ற இந்த ரொட்டி வழங்கும் விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்,மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சங்கல் தோப் பு தர்காவுக்கு வரும் பக்தர் களுக்கு ஒவ்வெரு ஆண்டும் மிலாடி நபியை முன்னிட்டு ரொட்டி தானமாக வழங்கப்பட்டு வருகிறது, இந்த ஆண்டும் ஒரு லட்சம் புரோட்டா தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது, இந்த ஆண்டும் புரோட்டா பக்தர்களுக்கு வழங்க தர்கா நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பக்தர்கள் பத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதி உள்ளதாக பாபு என்ற கஃரலிஷ வேதனையுடன் குறிப்பிட்டார்.

தர்காவுக்கு வரும் பக்தர்களின் பசியாறும் வகையில் வழங்கப்பட்டுவரும் தானத்திற்கு தடைவிதிக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.அப்போது முனிரா என்னும் மஸ்தானியாம்மா ஷாயிமசூதி உறுப்பினர் தாயர் பாய், பயாஸ்’ ,வாஜிப், ரஃபிக், சாதிக், ஆறுமுகம், ஜாபர், முபாரக் , முதசீர், முன்னா,முஜயித், கபாலி, இக்பால்,உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Views: - 172

0

0