பட்டதாரி பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை.! கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

2 March 2021, 8:32 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் பட்டதாரி பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் மங்காவிளை அருகே கரியன் விளையை சேர்ந்தவர் கிரிஜா (38 )எம்.ஏ., எம்.பில் பட்டதாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் ,80 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் பரிசாக கொடுத்ததாக தெரிகிறது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள் கிரிஜாவை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாகர்கோவில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி விசாரணை நடத்தி வேல்முருகன் மற்றும் அவரது உறவினர்கள் கலைச்செல்வி ,வரதராஜன், தமிழ்ச்செல்வி, ரமேஷ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Views: - 7

0

0