பல்வேறு கோரிகையை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மனு…

12 August 2020, 9:36 pm
Quick Share

விருதுநகர்: தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடந்த 6 மாத சாலை வரி மற்றும் தற்போது உள்ள இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிகையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா பேரிடர் காலமாக காரணமாக கடந்த ஆறு மாத காலமாக வாகனங்கள் வாடகை தொழில் மற்றும் வாழ்வாதாரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், இதுவரை மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலனுக்காக தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், மேலும் எங்களுக்கு நிவாரண தொகை வரிச்சலுகை போன்ற எந்தவிதமான சலுகைகள் கிடைக்க வில்லை என்றும்,

மேலும் இ பாஸ் முறையை தமிழகம் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களது வாகனத்திற்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் மேலும் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வாகனத்தை இழப்பீடு பெற்று தரவேண்டும் ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் எளிய முறையில் கடமையைச் செய்தாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Views: - 8

0

0