செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை முன்பு கிளை மேலாளருக்கு எதிராக பேருந்துகளை இயக்கவிடாமல் ஓட்டுநர்கள் போராட்டம்..!!

2 February 2021, 3:23 pm
Quick Share

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு,மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனைகளில் போக்குவரத்து ஊழியா்கள் இன்று திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படனா். இந்த 2 பணிமனைகளுக்கும் கிளை மேலாளராக மீனாட்சிசுந்தரம் என்பவா் இருக்கிறாா். இவா் ஊழியா்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மாதத்தில் 4 நாட்கள் விடுப்புகள் உள்ளன.ஆனால் அந்த விடுப்பை எடுத்தால்,ஆப்செண்ட் போடுவது,

ஊழியா்களை பணி நேரம் முடிந்த பின்பும், கூடுதலாக வேலை வாங்குவது, அதோடு தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொழிலாளா்கள் தரப்பில் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அரசு தற்போது அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் செங்கல்பட்டு,மதுராந்தகம் பணிமனைகளில் அந்த பஸ்களை இன்னும் இயக்க தொடங்கவில்லை.

இதனால் தனியாா் பஸ்கள்,ஷோ் ஆட்டோக்கள் அதிக அளவில் அந்த தடங்களில் இயக்கப்படுகின்றன. எனவே கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட பஸ் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும், செங்கல்பட்டு, மதுராந்தகம் பணிமனைகளில் இன்று காலை அரசு போக்குவரத்து ஊழியா்களான டிரைவா், கண்டக்டா் உட்பட சுமாா் 70 போ் திடீா் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனா். பணிக்கு வந்த ஊழியா்கள் பஸ்களை இயக்காமல் பணிமனைகளின் வாசல்களில் நின்று கிளை மேலாளருக்கு எதிராக கோஷமிட்டனா்.

இதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், திண்டிவனம், அச்சரப்பாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூா், திருப்பதி, சித்தூா், வேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 60 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. அதைப்போல் மதுராந்தகம் பணிமனையிலிருந்து செய்யூா், சூனாம்பேடு, சித்தாமூா், மேல்மருவத்தூா், வேடந்தாங்கல், கருங்குழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய 50 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பவில்லை.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வம் தலைமையில் தாசில்தாா் உள்ளிட்ட அதிகாரிகள் 2 பணிமனைகளுக்கும் விரைந்து வந்து போக்குவரத்து ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அதில் ஏற்பட்ட உடன்பாட்டிற்குபின்பு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

Views: - 10

0

0