ஓட்டுநர் உயிரை பறித்த தூக்க மாத்திரை: உறக்கம் வருவதற்கு அதிகளவு மருந்தை உட்கொண்டதால் விபரீதம்..!!

Author: Rajesh
14 February 2022, 12:47 pm
sucide - updatenews360
Quick Share

கோவை: அளவுக்குஅதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்(39). இவருக்கு சந்தோஸ் மணி என்ற மனைவி உள்ளார். டிரைவராக பணிபுரிந்து வந்த ஜெயபிரகாஷ் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தூக்க மாத்திரை சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயபிரகாஷ் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து அவர் நினைவிழந்த நிலையில் வீட்டில் இருந்த அவரை குடும்பத்தார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை ஜெயபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 343

0

0