டீ கடையில் வடை சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்…

Author: kavin kumar
13 February 2022, 2:26 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் டீ கடையில் வடை சுட்டு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர் வாக்கு சேகரித்தார்.

வரும் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 20 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர் இன்று பெரியசௌராஷ்ட்ரா தெரு, மணியகாரன் தெரு, மருத்துவர் தெரு, ராணி தெரு, வடக்கு ராணி தெரு, சின்ன சௌராஷ்டிரா தெரு, கிழக்கு சௌராஷ்டிரா தெரு, பெரிய சவுராஷ்டிரா தெருவில் தீவிரவாத செயல் பட்டால் அப்போது அங்குள்ள டீக்கடையில் வடை போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Views: - 358

0

0