வேலூர் தொகுதி… ஏ.சி. சண்முகத்தை முந்திய கதிர் ஆனந்த்..? வெளியானது கருத்துக்கணிப்பு

Author: Babu Lakshmanan
17 April 2024, 1:25 pm

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தல் அனைத்து கட்சிகளுக்குமே கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலூர் தொகுதி தான் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. காரணம், கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் இந்த முறையும் மோதுவது தான்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

திமுக சார்பில் கதிர் ஆனந்தும், பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏசி சண்முகமும் போட்டியிடுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் கதிர் ஆனந்த் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த சூழலில், மீண்டும் அதே இரு வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது தமிழகத்தையே உற்று பார்க்க வைத்துள்ளது.

திமுகவின் சாதனைகளையும், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக செய்த திட்டங்களையும் பட்டியலிட்டு கதிர் ஆனந்த் வாக்குசேகரித்து வருகிறார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு தேவையான திட்டங்களை வாக்குறுதியாக அளித்து ஓட்டு கேட்டு வருகிறார். அதேவேளையில், கடந்த முறை அதிமுக – பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி சண்முகத்திற்கு, அதிமுக இல்லாத பாஜக கூட்டணி மட்டுமே அமைந்துள்ளது. எனவே, இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல தனியார் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த தேர்தலை விட கதிர் ஆனந்திற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிய வந்துள்ளது. மேலும், பாஜக கூட்டணி வேட்பாளர் இந்த முறையும் 2வது இடத்தையே பிடிப்பார் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய இந்தக் கருத்துக்கணிப்பை கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • A case file on pa ranjith regarding stunt master accident  ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்; இயக்குனர் பா ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு!