கூட்டணிக்காக அச்சுறுத்திய பாஜக.. ஜெயலலிதா போல துணிந்து எடுத்த முடிவு ; பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு..!!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 12:04 pm
Quick Share

பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக அச்சுறுத்தியதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் படிக்க: ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி… கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி : CM ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும் வரை பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்பந்தம் வந்ததாகவும், அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா போல தைரியமாக முடிவெடுத்ததாக பிரேமலதா தெரிவித்தார். இந்த முறை அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி என மக்களுக்காக. தொகுதிக்காக உறுதியாக முடிவெடுத்ததாக பிரேமலதா கூறினார்.

எத்தனையோ நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும், வங்கி கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும், பனங்காட்டு நரி சலசலப்பிற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார். எத்தனை சோதனைகள் வந்தாலும் கேப்டனும், அவரது துணைவியாரும் அஞ்சுபவர்கள் கிடையாது என்றார். எனவே ஆளும் பாஜவிற்கும், திமுகவிற்கும் இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்றார். இது ராசியான மக்கள் விரும்பும், தமிழ்நாடே போற்றும் வெற்றி கூட்டணி என்றார். பாமக இருந்தால் சிறுபாண்மையினர் வாக்குகள் கிடைக்காது எனவும், பாஜக இருந்தால் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது எனவும், கடவுள் புண்ணியத்திலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்கள் ஆசிர்வாதத்தோடு அவர்களாகவே வெளியே சென்று விட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: தேர்தலால் களையிழந்து போன ஆட்டுச்சந்தை… ரம்ஜான் பண்டிகை வந்தும் பயனில்ல ; புலம்பும் ஆட்டுச்சந்தை வியாபாரிகள்..!!

அதிமுக, தேமுதிக வெற்றி கூட்டணி எனவும், மகத்தான கூட்டணி என்றார். அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு முன்பு வரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வந்த நிலையில், தற்போது அதிமுக-தேமுதிக கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வெளியாவதாக பிரேமலதா கூறினார்.

டாஸ்மாக் கடைகளிலும், கஞ்சாவாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார். தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்ட பிரேமலதா விஜயகாந்த், திரைப்பட வசனமான துளசி கூட வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது என்று கூறிய போது அங்கிருந்த தேமுதிகவினர் ஆரவாரம் செய்தனர்.

Views: - 155

0

0