‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி… கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி : CM ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 11:20 am
Quick Share

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும், ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக முதலமைச்ச் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?. சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

மேலும் படிக்க: கச்சத்தீவு அந்த வாரிசுகளுக்குத் தான் சொந்தம்… விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு ; அமைச்சர் ரகுபதி..!!

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

மேலும் படிக்க: திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்…? அதிமுக தனித்து போட்டியிடுவதே இதுக்காகத்தான் ; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!!

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 105

0

0