உடல் உறுப்பை விற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுனர் மனு: சம்பளம் வழங்காததால் விபரீதம்

22 August 2020, 2:46 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 மாத காலமாக சம்பளம் வழங்காததால் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக உடல் உறுப்பை விற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுனர் மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 750க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிபுரிந்து வருகின்றனர், நிதி நெருக்கடி காரணமாக புதுச்சேரி அரசு இவர்களுக்கு கடந்த 6 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை, இந்நிலையில் அங்கு ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் தமிழ்ச்செல்வம் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு தன் உடல் உறுப்பு விற்பதற்கு அனுமதி கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறுவதாவது:- கடந்த ஆறு மாத காலங்களாக ஊதியம் வழங்காத காரணத்தால் வீட்டு வாடகை மற்றும் குடும்பச் செலவுகளுக்கு கடன் அளித்த பலர் வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு வருகின்றனர் என்றும், தன் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது உடல் உறுப்பை விற்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறியிருக்கிறார். அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுனர் ஒருவரே இதுபோன்ற மனு அளித்திருப்பது புதுச்சேரி அரசு ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 24

0

0