வாகனத்தில் வந்த நடிகைக்கு சால்வை அணிவித்த போதை ஆசாமி : பிரச்சாரத்தில் பரபரப்பு!!

Author: kavin kumar
4 October 2021, 1:42 pm
Gayathri -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திருக்கோவிலூர் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட நடிகைக்கு காரின் மீது ஏறி நின்று சால்வை அளித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் குடமுருட்டி ஊராட்சியில் பாஜக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் மகாலிங்கம் மற்றும் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பழனிசாமி உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட திரைப்பட நடிகையும் தமிழக பாஜகவின் கலை கலாச்சாரப் பிரிவு மாநில தலைவியுமான காயத்ரி ரகுராம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த போதை ஆசாமி ஒருவர் பிரச்சார வாகனத்தின் முன்பக்கம் மேல் ஏறி நின்று நடிகைக்கு சாலை அணிவிக்க முயன்றார். இதனை அடுத்து நடிகை காயத்ரி சுதாரித்து சால்வையை கையில் வாங்கி நன்றி தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 128

0

0