கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

8 September 2020, 9:57 pm
Quick Share

ஈரோடு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என் பாளையம் பகுதியில் போதை பொருட்கள் கடத்தல் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பங்களாபுதூர் சோதனை சாவடியில் வாகன சோதனையை தீவிர படுத்தினர் . இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த மினிவேனில் சோதனை செய்ததில் பூண்டு லோடுகளுக்கு மத்தியில் 35 மூட்டைகள் மற்றும் 10 அட்டைப் பெட்டியில் பான்மசாலா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஓட்டுனர் செந்தில் குமார் என்பவர் மதுரைக்கு கர்நாடக மாநிலம் கோழிப்பாளையத்தில் இருந்து போதைபொருட்களை கடத்த முயற்சி செய்தது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0