குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்: ஆறு நாட்களில் திருமணம் ஆக இருந்த இளைஞர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

6 July 2021, 5:58 pm
Quick Share

விழுப்புரம்: வீரபாண்டி அருகே மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ஆறு நாட்களில் திருமணம் ஆக இருந்த இளைஞர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் அருகில் ஆதிச்சனூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசால் டாஸ்மார்க் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு வீரபாண்டி கிராமத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் மது பிரியர்கள் இரு சக்கரம் வாகனங்களில் வந்து மது வாங்கி செல்வது வழக்கம் . இந்நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுனர் இந்த மதுக் கடையில் மது அருந்திவிட்டு மீண்டும் வீரபாண்டி கிராமத்திற்கு ஆட்டோவை ஓட்டி செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தோஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த இளைஞருக்கு ஆறு நாட்களில் அவரின் வீட்டார் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர் ஏற்படுத்திய விபத்தில் இழந்ததை கண்டித்தும் வீரபாண்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி சந்தோஷின் குடும்பத்தாரும் பொதுமக்களும் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கூட சமரச பேச்சுவார்த்தை மூலம் சாலை மறியல் கைவிடப்பட்டது. திருமணம் ஆக இருந்த நிலையில் மாப்பிள்ளை விபத்தில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 33

0

0