மதுபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட நபர்:பிடிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து…

Author: Udhayakumar Raman
17 September 2021, 8:31 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே மதுபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தையுள்ளது.

திருச்சி மாவட்டம். சோமரசன்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் குடிபோதையில் சோமரசன்பேட்டை அடுத்துள்ள சுண்ணாம்புகாரப்பட்டி சாலை நடுவில் மதுபோதையில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி தீ வைத்து கொளுத்தி உள்ளார். மேலும் அப்பகுதியில் வந்த பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பற்றவைத்த தீயை அனைத்து அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அந்த நபர் மதுபோதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தன்னைத்தானே கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் கார்த்தி சாந்தகுமாரை பிடிக்க முயன்றார். அப்போது மது போதையில் இருந்த சாந்தகுமார் தனது கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் கார்த்திகை குத்தி உள்ளார். இதில் கார்த்திக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர். பின்னர் சாந்தகுமாரும், காயமடைந்த உதவி ஆய்வாளர் கார்த்தி இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுபோதையில் சாந்தகுமார் செய்த இந்த செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 148

0

0