பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மூலிகை டீ வழங்கிய டிஎஸ்பி

15 May 2021, 6:42 pm
Quick Share

அரியலூர்: அரியலூரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மூலிகை டீயினை டிஎஸ்பி மதன் வழங்கினார்.

கொரோனா தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனையொட்டி அரியலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சுறுசுறுப்புடன் செயல்படும் வகையில் மூலிகை கலந்த டீயினை டிஎஸ்பி மதன் இன்று மாலை வழங்கினார். இதில் இஞ்சி, தேன், எலுமிச்சை, துளசி கலந்துள்ளதால் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும் என்பதாலும், மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதற்காக காலை, மாலை இரண்டு வேலையும் வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டது. பின்னர் அந்த வழியே வந்த கோட்டாச்சியர் மற்றும் வட்டாச்சியருக்கும் மூலிகை டீ வழங்கபட்டது. இதில் ஏராளமான காவல்நிலைய மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கலந்து கொண்டனர்.

Views: - 45

0

0