ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Author: Udhayakumar Raman
8 August 2021, 4:56 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா அலையால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் அமாவாசை நாளான இன்று பக்தர்களுக்கு காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுவாமிக்குரிய பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் குளிக்கவோ ,முன்னோர் தர்ப்பணம் செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Views: - 92

0

0