எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை: முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

22 September 2020, 10:54 pm
Quick Share

புதுச்சேரி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு பாராளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பாக நிறைவேற்றி உள்ள மசோதாக்கள் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக, விடுதலை சிறுத்தைகள் , இடது சாரிகள் உள்ளிட்ட மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியை சேர்ந்த கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர்,

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் வரும் 28ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ள மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஒரு விவசாயி என கூறுகிறார். ஆனால் விவசாயிகளின் கஷ்டம் அவருக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டிய அவர்,

விவசாயிகளின் விலை பொருளை மத்திய அரசு நிர்ணயக்கிற விலைக்கு வாங்க முடியாததால் அதை கார்ப்ரேட் கம்பெனிகள் கொள்முதல் செய்து பதுக்கி வைத்து அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம வழி வகுக்கின்றனது என்றும் இதனை தமிழக முதலமைச்சர் ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர் இதற்கு தமிழக முதலமைச்சர் பதில் செல்லட்டும் என்றார்.

Views: - 9

0

0