எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து போராட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

13 July 2021, 2:29 pm
Quick Share

தஞ்சாவூர்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க கோரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினரை கைது செய்யப்பட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க கோரி தமிழகத்தில் நேற்றைய தினம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு மத்திய அரசை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கிராமங்கள் தோறும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் எடியூரப்பாவின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் எச்சாரித்தும் களைய மறுத்தால் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் கன்னியாகுமரியிலிருந்து கும்முடிபூண்டி வரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Views: - 88

0

0