சாலையில் அதிவேக சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 8 பேர் கைது

Author: kavin kumar
16 August 2021, 10:54 pm
Quick Share

திருவள்ளூர்: வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் பந்தயம் வைத்து அதிவேக சாகசத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 8 பேரை போலீசார் கைது செய்து, 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அருமந்தை அருகே இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் பந்தயம் மூலம் அதிவேக சாகசத்தில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வேகமாக இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,

அவர்கள் வியாசர்பாடி, சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பந்தயம் வைத்து அவர்கள் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகச சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 63799 04848 திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 198

0

0