வயதான தம்பதியினர் மர்மமான முறையில் வெட்டி படுகொலை: தனிப்படை அமைத்து விசாரணை செய்ய டிஐஜி உத்தரவு

13 July 2021, 7:33 pm
Quick Share

தருமபுரி: பொம்மிடி அருகே வயதான தம்பதியினர் மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இடத்தை டிஐஜி பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

துருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், சுலோக்ஷனா ஆகிய வயதான தம்பதியினர் மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயதான சுலோக்ஷனா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவருடைய கணவர் கிருஷ்ணன் தனது 7 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து, இருவரும் விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாக வெளியூரில் உள்ளனர். இந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே இருவரும் மர்மமான முறையில் கழுத்து பகுதியில் வெட்டு ஏற்பட்டு இரத்த கரையில் இறந்து கிடப்பதாக,

இவர்களுடைய விவசாய நிலத்தில் கூலி வேலைக்குச் சென்ற பெண்கள் பார்த்ததை அடுத்து பொம்மிடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசரனை மேற்கொண்டனர். சடலங்களை கைப்பற்றிய போலிஸார், தடவியல் துறை, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்பு சடலங்களை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டதை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 168

0

0