வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற முதியவர் கைது: சாராய மூலப்பொருட்கள் மற்றும் சாராய ஊறல் பறிமுதல்

21 July 2021, 8:29 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காட்டில் பஞ்சர் கடையில் பணி புரிவது போன்று வீட்டில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 200 லிட்டர் பேரல் இரண்டு கேன்கள் மற்றும் பானைகளில் இருந்த சாராய ஊறல் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூமி கோட்டை பகுதியைச் சேர்ந்த பஞ்சர் ஓட்டும் தொழிலாளி வீட்டினில் ஸ்டவ் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வீட்டில் சாராயம் தயாரித்தபோது 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இரண்டு சிறிய 25 லிட்டர் கேன்களில் வைத்திருந்த சாராய மூலப்பொருட்கள், 200 லிட்டர் பேரல்கள், இரண்டு 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சாராயம் காய்ச்சும் பானைகளில் இருந்த ஊறலை பறிமுதல் செய்து முதியவர் ஷாஜகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Views: - 52

0

0