இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற முதியவர் கைது

25 September 2020, 3:34 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் இவருடைய டி.வி.எஸ் ஃபிப்டி பைக்கை ஆத்துக்கடை தெருவில் நிறுத்திவிட்டு இவர் நண்பருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் டி.வி.எஸ் ஃபிப்டியை எடுத்துச் சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமரேசனும் அவர் நண்பரும் விரட்டிச் சென்று முதியவரை பிடித்து விசாரித்தபோது அவர் வத்ராப் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பதும், மேலும் டிவிஎஸ் ஃபிப்டி இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்வதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர் காவல்துறையினர் குருநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Views: - 4

0

0