நோய் குணமாக விரக்தியில் மனைவியுடன் விஷம் அருந்திய முதியவர் தற்கொலை

Author: kavin kumar
28 September 2021, 3:56 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரியில் தனது மனைவியுடன் முதியவர் அரளி விதை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஜெயராமன், ராஜாம்பாள். தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள் ஒருமகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் வசிக்கின்றனர். ஜெயராமன் கூலி தொழில் செய்பவர். கடந்த சில மாதங்களாக இவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையில் இவருடைய பிள்ளைகள் இவர்களுக்கு வேண்டிய அனைத்து பண உதவிகளும் செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் மன உளைச்சலில் இருந்தநிலையில் அரளி விதை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

வீட்டிலேயே ஜெயராமன் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜம்மாளை அருகிலிருந்தவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது அவர், உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரி போலீசார் மன உளைச்சல் காரணமாக இருவரும் உயிரிழந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக வரும் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 154

0

0