நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே உயிரிழந்த முதியவர்: காவல் துறையினர் வர தாமதமானதால் மழையில் நனைந்த சடலம்…

Author: Udhayakumar Raman
2 September 2021, 8:51 pm
Quick Share

வேலூர்: வேலூரில் கருவாடு விற்க வந்த இடத்தில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே முதியவர் உயிரிழந்தார்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சமூவேல் நகர் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கருவாடு விற்று வந்துள்ளார். அப்போது சாலையில் செல்லும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பொது மக்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் வர 2 மணி நேரம் வரை தாமதமானதால் முதியவர் சடலம் மழையில் நனைந்தபடியே இருந்துள்ளது. காவல் துறையினரின் விசாரணையில், விற்பனையின் போது சாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த முதியவர் சேன்பாக்கம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(60) என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவிறர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Views: - 335

0

0