மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

26 November 2020, 8:12 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் பகுதியில் வசித்து வருபவர் ருக்மணி வயது 65. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரு மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ருக்மணி தனியாக வசித்து வருகிறார்.

இன்று காலை ருக்மணி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள குளியலறைக்கு சென்று உள்ளார் அப்போது அங்கு உள்ள மின் விளக்கிற்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பியில் பழுது ஏற்பட்டு மின் கசிவு உண்டாகி இருந்தது தெரியாமல் தவறுதலாக அதன்மீது ருக்மணி கை வைத்துள்ளார். இதனால் ருக்மணி மீது மின்சாரம் பாய்ந்து துடித்துக் கொண்டிருந்தார்.

இதனை பின் புறத்தில் வயல் வெளியில் நின்றுகொண்டிருந்த ருக்மணியின் எதிர்வீட்டு இளைஞர் விக்னேஷ் வயது 24 பார்த்து ருக்மணியை காப்பாற்ற அவர் மீது கை வைத்துள்ளார். இதன் காரணமாக விக்னேஷ் மீது மின்சாரம் தாக்கி காயம் அடைந்தார் ருக்மணி மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த விக்னேஷ் ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ருக்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 0

0

0