தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்…!!

6 March 2021, 4:58 pm
kanchi1 - updatenews360
Quick Share

காஞ்சிபுரம்: சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் எல்லப்பன், மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 2

0

0