தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

5 March 2021, 7:07 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர்கள் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இன்று ஆண்டாள் கோவில் வளாகத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தட்டிச்சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் மாவட்டம் முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு பணிகள் குறித்த விஷயத்தில் துணை ராணுவம் துணையோடு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் நாளை மாலை ஐந்து மணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள் முன்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரிசைப் படுத்தப்படும் என்றும் தொடர்ந்து ஞாயிறு காலை முதல் EVM மெஷின்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டு இயந்திரங்கள் வைத்திருக்கும் இடங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் தற்போது உள்ள நிலைமையில் 91 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இனி வரும் நாட்களில் அது கண்காணிக்கப்பட்டு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மேலும் மாவட்டத்தில் உள்ள 50 சதவீத வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கண்காணிப்பு கேமரா மூலம் நேரடியாக பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Views: - 1

0

0