நீலகிரியில் மின் வேலிகள் முறைப்படுத்தப்படும்: மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேட்டி

Author: kavin kumar
13 August 2021, 5:57 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் பயிர் பாதுகாப்பிற்காக விவசாயிகள் அமைத்துள்ள சூரிய மின்வேலியில் சிக்கி வன விலங்குகள் பலியாவதை கருத்தில் கொண்டு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆய்வு செய்து மின் வேலிகள் முறைப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்டத்தில் வனத்துறை மற்றும் வருவாய்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மலை மாவட்டத்தில் அணுக முடியாத குடியிருப்பு பகுதிகளில் வாழும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சவால்களுக்கிடையே பணியாற்றியதற்காக மாநில அரசு விருது அறிவித்துள்ளதாகவும், இது இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றார்.

தமிழகத்தில் உதகை நகராட்சி தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக எழில்மிகு நகராட்சியாக மாநில அரசு தேர்வு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் அத்துமீறல்களை கட்டுப்படுத்த மாவட்டத்திலுள்ள 3000 பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 10 குழந்தைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகள், குறித்து ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Views: - 411

0

0