மின் கம்பத்தில் பழுதுபார்த்த மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்

1 December 2020, 4:10 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நீதிமன்றம் எதிரில் மின் கம்பத்தில் பழுதுபார்த்த மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலையில் நீதிமன்றம் எதிரியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பம் உள்ளது. இந்நிலையில் மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் இன்று திருப்பத்தூர் மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் மின்சார வாரியத்தில் போர் மேனாக பணி புரியும் கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகுனிச்சி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் குணசேகரன் (45) என்பவர் மின்கம்பத்தில் ஏறி தெரு விளக்கை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் குணசேகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 18

0

0