நெடுமங்காடு பகுதியில் பெய்த மழைக்கு மின்வாரிய ஊழியர் பலி
6 August 2020, 3:44 pmகன்னியாகுமரி: தமிழக- கேரளா எல்லையான நெடுமங்காடு பகுதியில் மழைக்கு மின் வாரிய ஊழியர் உயிரிந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தமிழக கேரள எல்கையான நெடுமாங்காடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அஜயன் குமார் (40). தனது இருசக்கர வாகனத்தில் மின் வாரிய அலுவலகத்துக்கு செல்லும் போது காற்றுடன் கூடிய மழை பெய்ததில் மரம் முறிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.தொடர்ந்து கேரள போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.