யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டிகள்

10 November 2020, 6:51 pm
Quick Share

நீலகிரி: முதுமலையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்திபூர் அருகே யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டிகள்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது வனப்பகுதி வழியே செல்லும் சாலை என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அதிகமாக மாலை நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில், முதுமலையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்திப்பூர் சாலையோரத்தில் ஒற்றை யானை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் யானையை கடந்து செல்ல முயற்சித்த போது திடீரென யானை அவர்களை துரத்த ஆரம்பித்தது. சாதுரியமாக இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை பின்னோக்கி எடுத்துச் சென்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பினர்.

Views: - 22

0

0