பகல் நேரங்களில் உலா வரும் யானைகள்: வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை…!

3 July 2021, 7:54 pm
Quick Share

நீலகிரி: குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் பகல் நேரங்களில் யானைகள் உலா வருவதால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர்,பர்லியார் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் காரணமாக உணவு தேடி யானைகள் சாலை ஓர பலாப்பழ மரங்களை தேடி உலாவருகின்றன. இந்நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பழங்குடியின குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வரும் காட்டு யானைகளை ஆபத்து அறியாது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடித்து யானைகளை தொந்தரவு செய்யும் நோக்கில் ஈடுபடுகின்றனர். எனவே இவ்வாறு யானைகள் சாலைகளில் உலா வருவதை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டவும், இது போன்று வன விலங்குகளை சாலைகளில் நின்று படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 46

0

0