பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

22 September 2020, 3:40 pm
Quick Share

சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகர சாலையோர வியாபாரிகள் சுயதொழில் செய்வோர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பணபலம் அதிகார செல்வாக்கு உடையவர்களுக்கு சாதகமாகவும் அடித்தட்டு மக்கள் சுயதொழில் வாழ்வாதார வியாபாரிகளிடம் அதிகார மமதையோடு செயல்படும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதை திரும்பப் பெற்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் அவர் மீது மத்திய புலனாய்வு விசாரணை அமைத்து உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட மற்றும் மாநகர சாலையோர வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் கன்னியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சாலையோர வியாபாரிகள் சுயதொழில் செய்வோர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநகராட்சி ஆணையாளர் உள்பட அதிகாரிகளின் ஆணவப்போக்கு இருக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 7

0

0