அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர் குடிபோதை வாக்குவாதம்: முகம் சுளிக்கும் நோயாளி உறவினர்கள்

17 May 2021, 6:29 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மாத்திரை வழங்கும் இடத்தில் நேற்று இரவு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் குடிபோதையில் நோயாளி உறவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகதங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று அரசு மருத்துவமனையில் மாத்திரை வழங்கும் இடத்தில் பணியிலிருந்த ஊழியர் ஒருவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த ஊழியர் மருந்து வாங்க வந்த நோயாளின் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 36

0

0