ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மூடல்…

7 August 2020, 9:51 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பிரப் சாலையில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதில் புதிய கட்டிடத்தில் வரிவசூல், புகார் மனு, ஆணையர் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களின் அறைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர், அலுவலக உதவியாளர் மற்றும் இரண்டு தற்காலிக உதவியாளர்கள் என நான்கு நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது மேலும் மூன்று நாட்கள் மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு செயற்பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0