ஆணிப்படுக்கையில் லகு வஜ்ராசனம் நிகழ்த்திய மாணவி

Author: Udayaraman
14 October 2020, 10:13 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் ஆணிப்படுக்கையின் மேல் அதிக நேரம் லகுவஜ்ராசனம் செய்து சாதனை படைத்து பள்ளி மாணவி அசத்தியுள்ளார் ‌

ஈரோடு மாவட்டம் அடுத்துள்ள கனிராவுத்தர் குளம் பகுதியில் வசித்து வருபவர் பிரியதர்ஷிதி . தற்போது பள்ளியில் படித்துவரும் இவர் சிறுவயதிலிருந்தே யோகா மேல் ஆர்வம் அதிகம் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரியதர்ஷினி இன்று லகுவஜ்ராசனா-வை செய்து அசத்தியுள்ளனர்.

இதனை சுற்றி தீ வைக்கப்பட்டு நடுவில் ஆணிப்படுக்கையில் அதிக நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்தார்.தொடர்ந்து 5நிமிடங்களுக்கு மேல் ஆணிப்படிக்கையில் சுற்றி தீயில் லகுவஜ்ராஜனம் செய்ததற்கு நோபல் வேர்ல்ட் ரெகார்ட் செய்து சாதனை படைத்துள்ளார் மேலும் இந்தியாவிற்காக யோகா செய்து சாதனை படைக்க வேண்டும் என்றும் இதற்கு தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் மாணவி பிரியதர்ஷினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 29

0

0