தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

17 September 2020, 5:30 pm
Quick Share

புதுச்சேரி: தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி பிள்ளைதோட்டம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பெரியார் அமைப்பினர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Views: - 5

0

0