ஆன்லைன் தேர்வில் குறைவான மதிப்பெண்: தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விபரீதம்..!!

Author: Aarthi Sivakumar
6 August 2021, 6:38 pm
sucide - updatenews360
Quick Share

திண்டுக்கல்: ஆன்லைன் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தாயார் திட்டியதில் மனமுடைந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அருகே ஒத்தக்கடை யைச் சேர்ந்த ஆனந்தன் தீபா (என்ற) சவுடேஸ்வரி தம்பதியினரின் ஒரே மகளான கீர்த்தனா 16 என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்
கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்துள்ளார். இதில் கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் வகுப்பில் முறையாக கலந்து கொள்ளாமலும் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தாயார் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி அதே ஊரில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் மர்மமான முறையில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எரியோடு ஆய்வாளர் சத்யபிரபா தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கீர்த்தனாவின் தந்தை ஆனந்தன் என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும் அவர் தாயார் மட்டும் ஒரே மகளை பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் ஆன்லைன் கல்வியில் மதிப்பெண் குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 269

0

0