காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

22 September 2020, 4:42 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூரில் கைது செய்த மகனை விடுவிக்க கோரி ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த B – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மணி (50) இவரது மகன் பிரேம்குமார் (24) மற்றும் அதே பகுதியை ராஜ்கிரண் (27), இருவரும் இரவு நேரங்களில் ஆம்பூர் பஜார் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பிரேம்குமார் மற்றும் ராஜ் கிரண் நேற்று இரவு வழிப்பறியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டதால், ஆம்பூர் நகர காவல்துறையினர் பிரேம்குமார் மற்றும் ராஜ் கிரணை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரிலேயே தனது மகனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்தாகவும், இதனால் தனது மகனை வீட்டிற்கு அனுப்பும்படி கூறி பிரேம்குமாரின் தந்தை மணி ஆம்பூர் நகர காவல்நிலைத்தில் இன்று திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Views: - 9

0

0