தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

4 February 2021, 3:46 pm
Quick Share

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் பெத்தா லட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்க துவக்கி வைத்தார். மேல் தொழில்நெறி வழிகாட்டும் கையேட்டினை வெளியிட்டு அதுமட்டுமல்லாமல் இந்த விழா சம்பந்தமாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் பேசுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிதி வழிகாட்டும் மையத்தின் பிரம் திங்கள்தோறும் திறன் பயிற்சி முகாம் நடத்துதல், செவ்வாய்தோறும் பள்ளி கல்லூரிகளில் தொழில் நரி வழிகாட்டி முறைகள் நிகழ்த்துதல், புதன் தோறும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வியாழன்தோறும் விழிப்புணர்வு வேலைவாய்ப்பு பதிவின்போது வழிகாட்டுதல், சுய வேலைவாய்ப்புக்கு ஊக்குவித்தல், தொழில் நெறி விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துதல், வெள்ளிதோறும் வேலைவாய்ப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்று எடுத்துரைத்தார். தன்னார்வ பயிலும் ஓட்டத்தின் மூலமாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அலுவலக வளாகத்திலும் இணையதளம் வாயிலாகவும் நடைபெற்று வருகிறது.

மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான கருமந்துறையில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 20 ஆண்டில் 10 மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே இந்த இலவச பயிற்சி வகுப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இதுவரை 1982 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். இதில் 272 மாற்றுத்திறனாளிகள் ஆவர் என்றும் ஆட்சியர் எடுத்துரைத்தார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் திருமதி லதா திட்ட விளக்க உரை ஆற்றினார்.

இதுதவிர கருத்தரங்கில் வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் ஞானசேகரன் மற்றும் முப்படைகளின் வேலைவாய்ப்புகள் குறித்து மேஜர் பிரபாகர் முன்னாள் படைவீரர் நலத்துறை அவர்களும் சுயவேலைவாய்ப்பு தொழில் முனைதல் குறித்து சிவகுமார் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் சேலம் அவர்கள் வங்கியில் வேலைவாய்ப்பு மற்றும் கடன் உதவி குறித்து ஸ்ரீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் சேலம் அவர்களும் போட்டித் தேர்வுகள் மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் குறித்து ஷீலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களும் உயர் கல்வி பற்றி செல்வி காயத்திரி அவர்கள் இளம் தொழில் அலுவலர் சேலம் அவர்களும் எடுத்துரைத்தனர்.

இந்த கண்காட்சியில் பல்வேறு மேற்படிப்பு மற்றும் போட்டித் தேர்வு குறித்து புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் உள்ள விபரங்களை அறிவதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்லும் மாணவ மாணவிகள் தங்களை உயர்த்திக் கொண்டு முன்னேற்றம் அடைய பயன்படும். இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது செய்திகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வளம்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Views: - 1

0

0