உணவக உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: கேரளவை சேர்ந்த வாலிபர் கைது

12 July 2021, 1:29 pm
Quick Share

ஈரோடு: பெருந்துறையில் உணவக உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கேரள வாலிபரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுங்கச்சாவடி அருகே தமிழரசு என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழரசை கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளார்.இதனையடுத்து சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் ஒருவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கேரள மாநிலம் ஆலாப்புலாவை சேர்ந்த அன்சப் என்பவர் என்பதும், உடன் வந்த ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு கத்தி மற்றும் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்த அன்சப் என்பவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Views: - 148

0

0