மலை அவரை விலை சரிவு: விவசாயிகள் கவலை

19 June 2021, 8:47 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானலில் மலை அவரை விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையக்கூடிய விலை பொருட்களில் மலை அவரை பயிரும் முக்கியமான ஒன்று. மாட்டுப்பட்டி பெருமாள் மலை ஊத்து பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த மலை அவரை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்த நிலையில், அவரை மகசூல் அதிக அளவில் உள்ளது. ஆனால் தரைப்பகுதியில் விளையக்கூடிய அவரைக்கு கிடைத்த விலை மலை அவரை பயிருக்கு கிடைக்க வில்லை. கிலோ 30 ரூபாய் அளவிற்கு தான் விற்கப்படுகிறது.

இதனால் மலை அவரை பயிரிட்ட கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். தற்போது நோய் தொற்று காலம் என்பதாலும் விளைந்த பயிரை வெளியூர்களுக்கு போதிய அளவில் கொண்டு சென்று விற்க முடியாமலும் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர். எனவே தமிழக அரசு கொடைக்கானல் மலைப்பகுதியில் அவரை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 119

0

0