வனச்சரக அலுவலர் மீது பொய் வழக்கு : பயிற்சி வனச்சரகர்கள் இரவிலும் போராட்டம்.!

Author: Udhayakumar Raman
24 September 2021, 8:44 pm
Quick Share

கோவை: வனசரக அலுவலர் மீது வழக்குப்பதிவ்ய் செய்த காவல்துறையை கண்டித்து பயிற்சி வனசரகர்கள் இரவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா தங்கும் விடுதியில் கடந்த செவ்வாய் கிழமை சென்னையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுடன் இருவர் தங்கியுள்ளனர். இந்நிலையில் இரவு வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் அங்கு ரோந்து சென்ற போது நீதிபதி மகனை அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும், யானை வரும் பகுதி என்றும் கூறியுள்ளார். இதற்கு, வனச்சரகர் குடிபோதையில் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குவாதம் முற்றிய நிலையில் விடுதியில் தங்கியிருந்த மூவரையும் காலி செய்ததாகவும்,

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் மீது வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன் புகார் அளித்தார். இதை தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வால்பாறை வனசரகர் ஜெயசந்திரன் வழக்கு விவகாரத்தில் மேட்டுப்பாளையத்தில் பயிற்சி வனசரகர்கள் பொய் வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Views: - 92

0

0