கொடுங்கையூரில் பிரபல புல்லட் திருடர்கள் கைது: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
14 September 2021, 2:31 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் பிரபல புல்லட் திருடர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் கே.கே.ஆர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது புல்லட் வண்டி யை அதே பகுதியில் உள்ள இரு சக்கர பழுதுபார்க்கும் கடையில் விட்டுள்ளார். கடைக்காரர் இரவு கடை யை மூடி விட்டு அந்த புல்லட் வண்டியை கடையின் வெளியே நிறுத்தி விட்டு  பூட்டி சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது புல்லட் வண்டி திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இதே போன்று மேலும் இரண்டு வண்டிகள் கொடுங்கையூர் பகுதியில் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் இருசக்கர வாகன திருட்டு கும்பலை பிடிக்க தனிப் படை அமைத்தனர்.

திருடு போன இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இரண்டு பேரின் புகைப்படங்கள் சிக்கின. அதை வைத்து ஆய்வு செய்த போது சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சந்தோஷ் என்கின்ற வெள்ளை சந்தோஷ் என்ற நபர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியாவந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் போலீசார் வெள்ளை சந்தோஷ்யைப் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவரையும் பிடித்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் சேர்ந்து வட சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் குறிப்பாக புல்லட் வாகனங்களை திருடியது தெரிய வந்தது. இந்த பைக் திருட்டிற்க்கு  சந்தோஷ் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். அவருக்கு உதவியாக ராபர்ட் இருந்ததும் தெரிய வந்துள்ளது.  கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 5 இரு சக்கர வாகனங்கள் ஒன்ற ரை சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரு வரையும் கொடுங்கையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 99

0

0