திருந்தி வாழ்ந்த ரவுடியை அடித்து கொன்ற நண்பர்கள்: புதுச்சேரியில் அரங்கேறிய கொடூர சம்பவம்

Author: Udayaraman
7 October 2020, 10:45 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் திருந்தி வாழ்ந்த ரவுடியை அடித்தே கொன்ற நண்பர்கள் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்-நரசிங்கம் ஆகிய இருவரை ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த இரட்டை கொலையில் திப்புராயப்பேட்டையை சேர்ந்த திப்லான் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள திப்லான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருந்தி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.அவர் மீது சந்தேகம் கொண்ட அதே வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகள் 4 பேர் நான்கு நாட்களுக்கு முன் அரியாங்குப்பம் அரிக்கன்மேடு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இரட்டை கொலையில் இறந்தவர்களின் கூட்டாளிகளுடன் திப்லான் கூட்டு வைத்திருப்பதாக சந்தேகம் கொண்டு மிரட்டியுள்ளனர். ஆனால் தான் திருந்தி வாழ்வதாக திப்லான் கூறியும் அவர்கள் கடுமையான தாக்கியுள்ளனர். கை-கால்கள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் திப்லானை அரசு பொது மருத்துவமனை முன் போட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடினார்கள். இதுகுறித்த தகவல் அறிந்து திப்லானின் தந்தை லெனின் மற்றும் நண்பர்கள் விரைந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை அனுமதிக்கப்பட்ட திப்லான் இன்று இறந்தார். இதனால் அடிதடி வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றினார்கள். தலைமறைவாகியுள்ள சவுந்திரபாண்டியன், தணிகையரசு, கவுசிக பாலசுப்மணியன், தவீத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள அரியாங்குப்பம் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 30

0

0