விவசாயி வெட்டி படுகொலை: காவல்துறையினர் விசாரணை

13 November 2020, 8:49 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான முதியவர் ராஜேந்திரன்.இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் விவசாயியான ராஜேந்திரன் கிருஷ்ணன் கோவில் – குன்னூர் செல்லும் சாலையில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அங்கேயே ஒரு குடிசை அறையில் தங்கி விவசாயம் பார்த்து வருகிறார்.மேலும் இவர் 30 ஆடுகள் வரை சொந்தமாக வைத்துள்ளார்.இந்நிலையில் விவசாயி ராஜேந்திரன் இன்று உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு அவரது நிலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்ட அப்பகுதிமக்கள் கிருஷ்ணன் கோவில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்த அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் வருகை தந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 21

0

0