வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் – விவசாய சங்கத்தினர் அறிவிப்பு

5 November 2020, 3:34 pm
Quick Share

திருச்சி: வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூவை.விஸ்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதா சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவே, தமிழக அரசு அமுல்படுத்தக்கூடாது
என வலியுறுத்தி வரும் 26ம் தேதி அன்று தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது, எனவே மழைநீர் வீணடிக்கப்படாமல் ஏரிகளிலும், அணைகளிலும் சேமிக்க வேண்டும், ஏரிகள் உடையாமல் முன் எச்சிரிக்கை பணிகளில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்,

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்து துறை, பெறியியல் துறை ஆகியவைகளில் எந்த திட்டமும் சாதாரண திட்டமும் கிடைப்பதில்லை. எனவே திட்டங்கள் விசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். காவிரி – புதுகை, குண்டாறு இணைப்புத்திட்டம் அமைக்கும் பணி காலதாமதம் செய்யாமல் விரைவில் துவங்கப்பட வேண்டும், இலவச விவசாய மின் இணைப்பு காலதாமதப்படுத்தாமல் இலவச விவசாய மின் இணைப்பை உடனே வழங்கப்படுதல் வேண்டும், குடிமராமத்து பணிகள், நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டப்பணிகள் மழைக்காலத்தில் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Views: - 13

0

0